Type Here to Get Search Results !

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 971 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.

தமிழகத்தில் மே 14ம் தேதி உறுதி செய்யப்பட்ட 447 தொற்றுகளில், சென்னையில் 363 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 5,637 பேரில், 1071 பேர் குணமடைந்துள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 61.02 சதவீதம் ஆண்கள், 38.94 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு மார்கெட்டை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று பரவியுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:


குணமடைந்தவர்கள்

வயது வாரியாக பார்க்கையில்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 4.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக  அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் எதுவும் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் இன்றைய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, திரு.வி.க.நகர் - 124, ராயபுரம் - 116, தேனாம்பேட்டை- 78, வளசரவாக்கம் - 53, தண்டையார்பேட்டை- 52, அம்பத்தூர் -51, வளசரவாக்கம் - 45, அண்ணாநகர் -45, மணலி -33, திருவொற்றியூர் - 32 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலமான கோடம்பாக்கத்தில் தொற்று எண்ணிக்கை 713 ஆக இருக்கக்கூடிய நிலையில் 22 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளனர்.

அதேபோல், மாதவரம் - 24, அடையாறு- 23, சோழிங்கநல்லூர் - 14, பெருங்குடி- 13, ஆலந்தூர் - 10 பகுதிகள் என மொத்தம் 690 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.கடந்த 10ம் தேதி சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587 ஆக இருந்தது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தபப்ட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழு தெருக்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அடைப்பு தவிர்த்து வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது அவரது வீட்டின் அருகாமையில் உள்ள இரண்டு மூன்று வீடுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி பொதுசுகாதாரத்துறையின் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடுமையாக கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad