Type Here to Get Search Results !

தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலம் கிருஷ்ணகிரியிலும் கொரோனா; கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் உயிரிழப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலம் கிருஷ்ணகிரியிலும் கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் இன்று 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பையனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட ஐந்து பேர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக சேவை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர் அப்போது மாநில எல்லையான நல்லூர் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து வருவது தெரியவந்தது இதனையடுத்து 5 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இவர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது அதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த நபர் சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் இவருடன் ஆந்திராவில் இருந்து வந்த நான்கு பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தொடர்ந்து இவர்கள் வசிக்கக்கூடிய கிருஷ்ணகிரி பாலாஜி நகர், நல்லதம்பிசெட்டி தெரு, காவேரிப்பட்டினம் சண்முகம் செட்டி தெரு, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க படுவதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களது உறவினர்கள் எட்டு பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது தமிழகத்தில் தொற்று இல்லாத பச்சை நிற பகுதியாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் தற்பொழுது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் உயிரிழப்பு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணமடைந்தார்.

பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி  தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார். பெரும் சிரமங்களுக்கு இடையே எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்த அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்தார்.

மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணியை நிர்வாகம் நீடித்துள்ளது. அதனால்  கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

சான்று பெற்று கொண்டு திரும்பியபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் படுவேகமாக மோதினார். இதில் காயமடைந்தவர்கள்  சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அகிலா இன்று இறந்தார். பிரோத பரிசோதனை முடித்து உடல் பெரம்பலூர் செல்கிறது.

ஏழ்மை குடும்பத்தில் டெய்லரின் மகளாக பிறந்து,
அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து5 ஆண்டு  நிறைவு செய்து, தந்தையின் கனவினை நினைவாக்கும் முன்பே அகிலா இறந்தது சக மருத்துவர்களையும், அவரது உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட டெய்லர் குடும்பத்திற்கு அரசு தான் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று அகிலாவின் நண்பர்களும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad