Type Here to Get Search Results !

ஆந்திராவில் விஷவாயு விபத்து: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
ஆந்திராவில் விஷவாயு விபத்து: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது.  ஊரடங்கால் ஆலை மூடப்பட்டு உள்ளது.  இந்நிலையில், திடீரென இதில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது.  இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.  இதன் பாதிப்பு 1 முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஏற்பட்டு உள்ளது.  வாயு பரவல் 2 முதல் 2.5 கி.மீ. தொலைவு வரை சென்றுள்ளது.  கிராமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதியில் உள்ள 120 பேர் வரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு பற்றிய தகவல் அறிந்த முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும்படியும், மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கும் அவர் செல்கிறார்.

இந்த விபத்தில் 1 குழந்தை உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கிராமத்தில் இருந்த 1,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.  அந்த பகுதியில் வசித்து வந்த 800 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியிடம், நிலைமை பற்றி தொலைபேசி வழியே பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.  அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவரிடம் உறுதியும் அளித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் மற்றும் நலனுக்காகவும் நான் வேண்டி கொள்கிறேன்.  நிலைமை உன்னிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.  அனைவரும் முக கவசங்களையும் அணிந்திருந்தனர்.

ஆந்திரா விஷவாயு விபத்து: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
விஷவாயு விபத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல உயிர்களை பலி கொண்ட விசாகப்பட்டினம் அருகே நடந்த விஷவாயு கசிவு விபத்து பற்றி அறிந்து வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  அனைவரது பாதுகாப்பிற்காகவும் மற்றும் காயமடைந்தோர் குணமடையவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad