Type Here to Get Search Results !

காலியான பால்பாக்கெட் கவர்களை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? - ஹோம் டிப்ஸ்

காலியான பால்பாக்கெட் கவர்களை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? 
முன்பெல்லாம் வீடுகளில் பால்பாக்கெட் கவர்களை சேகரித்து எடைக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது அந்த பழக்கம் பல வீடுகளில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் அவை சுற்றுசூழலுக்கு கேடு தராமல் மறுசுழற்சி செய்யும் விதமாகவே தயாரிக்கப்படுகிறது.

மீண்டும் பால் பாக்கெட் கவர்களை சேகரிக்கும் பழக்கத்தை பின்பற்றினால் இந்த விஷயங்களுக்கெல்லம் பயன்படுத்தலாம். அவை என்னென்ன தெரிந்துகொள்ளலாம்.

பால் பாக்கெட் கவரை பாலை ஊற்றி பயன்படுத்திய பின் அவற்றை சுடுதண்ணீரில் அலசி காய வைத்து மடித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனால் வாசனை வராது.

பால் பேக்கிங் கவர்கள் தடிமனான தரத்திலே தயாரிக்கப்படுகிறது. எனவே அதில் உணவுப் பொருட்களை சேகரிக்கலாம். ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை சேகரித்து வைக்கலாம்.

பட்டாணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் போன்ற காய்கறிகளையும் போட்டு வைக்கலாம்.

அவை உறையும் பதத்திலும் தாங்கும் என்பதால் உறைய வைக்க வேண்டிய உணவுப் பொருட்களையும் ஊற்றி வைக்கலாம். வைக்கும்போது இறுக மூடி வைக்க வேண்டும்.தோட்ட வேலைகள், தூசி நிறைந்த வீட்டு வேலைகள் செய்யும்போது கையுறைகள் இல்லையெனில் இதை கைகளில் மாட்டிக்கொண்டு வேலை செய்யலாம்.

குழந்தை வைத்திருப்போருக்கு அவசரத்திற்கு இது உதவலாம். அதாவது வெளியே செல்லும்போது குழந்தையின் டையப்பர், டிஷ்யூ, துணிகளை பயன்படுத்திய பின் தூக்கி எறிய இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பெண்களும் நாப்கின்களை தூக்கி எறிய பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீட்டில் நாய் வளர்போர் அதன் இயற்கை உபாதைகளை அகற்ற இந்த கவரைப் பயன்படுத்தலாம். இந்த பால் கவர்கள் தண்ணீர் நுழையாத வாட்டர் ப்ரூஃப் என்பதால் சிறு எலக்ட்ரானிக் பொருட்கள், செல்ஃபோன், ஹெட் செட் என தண்ணீரில் நனையாமல் இருக்க பயன்படுத்தலாம்.

பால்பாக்கெட் கவர்களை பந்துபோல் உருட்டி தேவையற்ற ஓட்டைகளை அடைக்கலாம். சமையலின் போது தட்டை, வடை தட்ட பயன்படுத்தலாம். முருக்கு மாவை கவரில் ஊற்றி முருக்குப் பிழிய பயன்படுத்தலாம்.

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? நிரந்தரமாக ஒழிக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்
வீட்டில் ஓட்டைகள் வழியாக கரப்பான் பூச்சிகள் சமையலறையைத் தேடிவரும். சிலருக்கு கரப்பான் பூச்சிகளைப் பார்த்தாலே அலர்ஜியாகும். எப்படியிருந்தாலும் வீட்டிற்குள் கரப்பான் பூச்சிகள் சேர்ந்தாலே வீடு சுத்தமாக இருக்காது. இதை ஒழிக்க வேண்டுமெனில் இந்த விஷயங்களை டிரை பண்ணி பாருங்கள்.

முதல் டிப்ஸ் :

வீட்டில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் கழுத்துப்பகுதியை வெட்டிக்கொள்ளுங்கள். பின் வெட்டிய பாட்டிலின் உட்புறத்தில் வாஸ்லின் இருந்தால் அதை சுற்றிலும் தடவுங்கள்.

அடுத்ததாக வெட்டிய வாய்ப்பகுதியை பாட்டிலுக்குள் கவிழ்த்து வையுங்கள்.

அது நகராமல் இருக்க சுற்றிலும் டேப் கொண்டு மூடுங்கள்.

தற்போது கவிழ்த்த மூடியிலும் வாஸ்லின் தடவுங்கள். இவ்வாறு தடவுவதால் உள்ளே செல்லும் கரப்பான் வெளியே வரமுடியாமல் வழுக்கி உள்ளேயே விழுந்துவிடும்.

அடுத்ததாக அதற்குள் சர்க்கரை தண்ணீர், காஃபி, மைசூர் பாக், ஜிலேபி என ஸ்வீட் வகைகளை போடலாம். பின் அந்த பாட்டிலை கரப்பான் பூச்சி வரும் இடத்தின் அருகில் வைத்தால் சின்ன கரப்பான் முதல் பெரிய கரப்பான் வரை வரும். அதற்குள்ளேயே விழுந்துவிடும்.

இரண்டாவது டிப்ஸ் :

ஒரு முட்டை வெள்ளைக் கருவில் போரிக் ஆசிட் பவுடர் இரண்டு ஸ்பூன் மற்றும் கோதுமை மாவு 2 ஸ்பூன் சேர்த்து கெட்டியாக கலக்குங்கள். தண்ணீர் பதம் இருந்தால் மீண்டும் கோதுமை சேர்த்துக்கொள்ளலாம்.

பின் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கரப்பான் பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டி போன்ற இடங்களில் வைத்தால் போரிக் ஆசிட் இருப்பதால் அதை சாப்பிட்டு இறந்துவிடும். இந்த டிப்ஸ் அதிகம் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களுக்கு பெரிதும் உதவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad