Type Here to Get Search Results !

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுகிறது: மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்; இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுகிறது: மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தகி வாதிட்டார். ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு உள்ளது. ஆனால்,  ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை.

தமிழகம், டெல்லி போன்ற சிறிய மாநிலம் இல்லை. ஒருவர் மது பாட்டில்களை எடுத்துச் செல்கிறார் என்றால், அதில் பல ஆபத்துக்கள் உள்ளன.

ஆன்லைனில் விற்பனை செய்தால் கலப்பட மது விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் மது கடத்தல் அதிகரிக்கும். மேலும் டாஸ்மாக் திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு.மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்” என்றார்.

ஐகோர்ட் விசாரணையின் போது தமிழக அரசு விரிவான பதிலளிக்க அவகாசம் கோரிவிட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கடைகளை திறக்க வேண்டும் என கோருவது வரம்பு மீறல் என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தொடங்கிய பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் எனவும் வாதத்தை முன்வைத்தார்.

அரசு மது வாங்க டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய அனைத்து உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. தனிமனித இடைவெளியை காவல் அதிகாரிகள்  துரிதமாக கண்காணித்தார்கள் என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தல் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மது விற்பனை செய்வது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு விட்டு தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அது முடியாது என சொல்கிறது. தமிழக அரசு தனது  நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருப்பது தான் பிரச்சனை என எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில்:
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad