Type Here to Get Search Results !

அமேசானில் வெளியாகிறது ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தால்’ கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமேசானில் வெளியாகிறது ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தால்’ கீர்த்தி சுரேஷின்‘பெண்குயின்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருந்த பொன்மகள் வந்தால் திரைப்படம் நேரடியாக OTT அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் திரைக்கு வர தயாராகி வந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT அமேசான் பிரைம் தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அமேசான் பிரைம் நிறுவனம் இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும் இதன் மூலம் தயாரிப்பு தரப்பு லாபம் பார்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும், இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சூரியா, ஜோதிகா ஆகியோரின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், சூர்யாவின் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவு இருந்தது.

திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாத சூழலி, அமேசான் பிரைம் தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும் திரையரங்கங்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இப்போதிருக்கும் சூழலில் தனி மனித இடைவெளி என்பது மிக நம் வாழ்க்கைச் சூழலில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

இந்த ஊரடங்கால் திரைத்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களது கடுமையான எதிர்ப்பையும் மீறி படத்தை வரும் 29-ம் தேதி சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் அமேசான் பிரைமில் வெளியிடுகிறது.

பொன்மகள் வந்தால் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பெண்குயின் திரைப்படமும் ஜூன் 19-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad