Type Here to Get Search Results !

நாகர்கோவில் காசிக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல்: கோர்ட்டில் இன்று ஆஜர்; தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நான்கு மாவட்டங்கள்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
நாகர்கோவில் காசிக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் :கோர்ட்டில் இன்று ஆஜர்
பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசிக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல்  செயல்பட்டு வருகிறது என்று மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். நாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 28). இவர், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  தன்னை பணக்கார வீட்டு பிள்ளை என்பதுபோல் காட்டி உள்ளார். இதனால், பல பெண்கள் இவருடன் நட்பாகி உள்ளனர். இவர்களில் சென்னையை  சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். நாளடைவில் அவருடன் நெருக்கமாக இருந்தபோது, புகைப்படங்கள், வீடியோக்களை சுஜி எடுத்து  வைத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி பணத்தை மிரட்டி வாங்கி உள்ளார்.

அந்த டாக்டர், குமரி மாவட்ட எஸ்.பி.க்கு அளித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏராளமான பெண்களை சீரழித்ததும், 200 பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது  லேப்டாப், செல்போனில் பல்வேறு வீடியோ காட்சிகள் உள்ளிட்ட பல முக்கிய தடயங்கள் கிடைத்தன. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க  நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ‘காசி ஒரு காமக்கொடூரன். பள்ளி மாணவிகளை  பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்’ என்று தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து பலரும்  ஆதாரங்களுடன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூறுகையில், ‘காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி, தற்போது நான் இந்தியாவில்  இல்லை. எனவே இந்த தகவலை குமரி மாவட்ட போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். காசி தனி ஆள் இல்லை, அவர்கள் மிகப்பெரிய கும்பலாக  சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் குரூப் போட்டோவில் முக்கிய கூட்டாளிகளின் படங்களும் உள்ளன. அவர்களுக்கும் இதில் தொடர்பு  உண்டு. எனவே அவர்களையும் விட்டுவிடக்கூடாது’ என்று பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நான்கு மாவட்டங்கள்
தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொற்று இல்லாததால் இந்த நான்கு மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் தொற்றின் தாக்கம் தொடக்கம் முதலே தீவிரமாக இருந்தது வருகிறது. அதிலும், கடந்த 6 நாட்களாக சென்னையில் மட்டும் 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து சில மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 22 நாட்களாக புதிய தொற்று கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேபோல், தூத்துக்குடியில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 பேரில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக புதிய தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், சேலம் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து நோய் இல்லாத மாவட்டமாகவே இருந்து வருகிறது.

அதேபோல், தமிழகத்தில் நோய் பரவ தொடங்கிய ஆரம்ப நாட்களில் கன்னியாகுமரியில் அடுத்தடுத்து 16 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பின், நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 18 நாட்களுக்கு பின் கன்னியாகுமரியில் 30 வயதான பெண்மணி ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டையில், பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இருப்பினும், கடந்த 12 நாட்களாக புதிய தொற்று எதுவும் அங்கு கண்டறியப்படவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad