Type Here to Get Search Results !

சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது - அமெரிக்கா குற்றச்சாட்டு; கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்- டொனால்டு டிரம்ப்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது, ஏராளமான சான்றுகள் உள்ளன- அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தான்  கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு ஏராளமான சான்றுகள்" உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மைக் பாம்பியோ கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை கையாளுவதில் சீனா தவறிழைத்து விட்டது.

அமெரிக்க உளவுத்துறையின் ஒரு அறிக்கையுடன் நான் உடன்படுகிறேன். அதில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது மரபணு மாற்றமாகவோ இல்லை என்ற பரந்த அறிவியல் ஒருமித்த கருத்துடன்" ஒப்புக் கொண்டது.

முழு உலகமும் இப்போது பார்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன், நினைவில் கொள்ளுங்கள், சீனாவுக்கு  தரமற்ற ஆய்வகங்களை இயக்கும் வரலாறு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான ஆரம்பகாலத்தில் சீன முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. தவறான தகவலை அளித்துள்ளது அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கியது.

ஜனாதிபதி டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்: பொறுப்புள்ளவர்களை நாங்கள் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என கூறினார்.

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்- டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-

இந்த ஆண்டின் இறுதியில் ஒரு தடுப்பூசி கிடைத்து விடும் என்று நாங்கள் நம்புகிறோம். செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்கள்-மாணவிகள் கல்வி கற்க செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இதற்கிடையே, உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 3,563,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,153,847 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 50,864   பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 1,187,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 68,589 பேர் உயிரிழந்துள்ளனர். திட்டமிட்டே அமெரிக்காவை குறிவைத்து சீனாவின் வுகானில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா  வைரஸ் உருவாக்கப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. சீனாவின் ஆய்வுக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதா அல்லது விலங்குகளிடம் இருந்து பரவியதா என்பது தொடர்பாக  அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை விட வேறொரு நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தது என்றால் நான் அவர்களுக்கு வாழ்த்து கூறுவேன்.  நல்ல வகையில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad