Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியது; கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3525 பேர் புதிதாக பாதிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியது
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 122 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,293ல் இருந்து 2,415 ஆக உயர்வடைந்து உள்ளது.  24 ஆயிரத்து 385 பேர் குணமடைந்தும், 47 ஆயிரத்து 480 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்து 756ல் இருந்து 74 ஆயிரத்து 281 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 921 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 5125 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 8903 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம்  இடத்தில் உள்ளது. அங்கு, 537 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3246 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் நேற்று முதல்  3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8718 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 2134 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 65 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
பீகாரில் 831 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 383 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 187 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 7639 பேருக்கு பாதிப்பு; 86 பேர் பலி; 2512 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 780 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 342 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 154 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 524 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 489 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4126 பேருக்கு பாதிப்பு; 117 பேர் பலி; 2378 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 172 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 79 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 437 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 116 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1914 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 171 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 69 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 925 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 433 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 934 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 455 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1326 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 830 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2173 பேருக்கு பாதிப்பு; 198 பேர் பலி; 612 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2090 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 1056 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3986 பேருக்கு பாதிப்பு; 225 பேர் பலி; 1860 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3664 பேருக்கு பாதிப்பு; 82 பேர் பலி; 1873 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 65 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad