Type Here to Get Search Results !

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது; நியூயார்க்கில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான பேர் பலியாகி இருக்கலாம்?

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 292,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,337,562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,597,860 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 46,340 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 22,455 பேர் குணமடைந்தனர். 
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 83,424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,408,574 ஆக அதிகரித்துள்ளது.
* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,911 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 221,216 ஆக உயர்ந்துள்ளது.
* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,920 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 269,520 ஆக அதிகரித்துள்ளது.
* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,116 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,243 ஆக அதிகரித்துள்ளது.
* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,991 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,225 ஆக அதிகரித்துள்ளது.
* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,692 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,463 ஆக உயர்ந்துள்ளது.
* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,733 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110,767 ஆக அதிகரித்துள்ளது.
* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,707 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,449 ஆக அதிகரித்துள்ளது.
* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,738 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173,171 ஆக அதிகரித்துள்ளது.
* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,984 ஆக அதிகரித்துள்ளது.
* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,919  ஆக அதிகரித்துள்ளது.
* துருக்கியில் 3,894 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,867 பேரும், பிரேசில் நாட்டில் 12,404 பேரும், சுவீடன் நாட்டில் 3,313 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,169 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,488 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,573 ஆக அதிகரித்துள்ளது.
* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

நியூயார்க்கில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான பேர் பலியாகி இருக்கலாம்?
நியூயார்க் மாநிலத்தில் 3,37,055 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன, 26,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் பலியாகி உள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 1,83,662 பாதிப்புகளும் 14,928 இறப்புகளும் பதிவாகி உள்ளன.

நியூயார்க் நகரில் பொதுவாக சூடான வசந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அல்லது அலுவலக ஊழியர்கள் ஓய்வு எடுக்கும் பிஸியான டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகிலுள்ள பூங்கா அமைதியான நிலைக்கு வந்துவிட்டது, அதேபோல் 80 லட்டத்திற்கும்  அதிகமான மக்கள் வசிக்கும் முழு நகரமும் கடந்த காலங்களில் பெரும்பாலும் இரண்டு மாதங்கள்  வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரம் ஜூன் வரை மூடப்பட  மேயர் பில் டி பிளேசியோ பரிந்துரைத்துள்ளார், நியூயார்க் மாநிலத்தின் மூன்று பகுதிகள் மே 15 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் நியூயார்க் நகரத்தை அழித்து நிலைகுலைய வைத்து உள்ளது. குறைந்தது 15 000 பேரின் உயிரை பறித்து உள்ளது, அதன் பொருளாதாரத்தை சிதைத்து  லட்சக்கணக்கானவர்களை வேலையிழக்க செய்து உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான மக்களைக் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிகப்படியான இறப்புகளை குறித்து ஆய்வு செய்தது மற்றும் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மார்ச் நடுப்பகுதியில் இருந்து அதிகப்படியாக 24,172 பேர் இறந்ததைக் கண்டறிந்தது.இவற்றில் சுமார் 19,000 உறுதியான  கொரோனா வைரஸ் மரணங்கள் ஆகும்.

ஆனால் நகரத்தின் அதிகப்படியான இறப்புகளில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுடன் வெளிப்படையான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று நியூயார்க் சுகாதார மற்றும் மன சுகாதாரத் துறையின் டொனால்ட் ஓல்சன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது

அந்த மரணங்கள் ஏன் நிகழ்ந்தன என்பதை சரியாக அறிவது கடினம். ஆனால் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இத்தகைய மரணங்களுக்கு கொரோனா நேரடியான காரணம் அல்ல என ஓல்சனின் குழு குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதலாக, சமூக இடைவெளி நடைமுறைகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பரமாரிப்புக்கான தேவை மற்றும் கொரோனா தொடர்பான பொது பயம் ஆகியவை உயிர்காக்கும் கவனிப்பைப் பெறுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் தெரிவிக்கப்பட்ட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் குறைந்து வருவது மக்கள் அவசர பிரிவுகளைத் தவிர்ப்பதன் விளைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad