Type Here to Get Search Results !

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.21 லட்சத்தை தாண்டியது; சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.21 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 303,070 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,521,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,702,113 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,566  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,549 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 26,235 பேர் குணமடைந்தனர். 
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 86,900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,456,745 ஆக அதிகரித்துள்ளது.
* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,368 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223,096 ஆக உயர்ந்துள்ளது.
* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,321 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 272,646 ஆக அதிகரித்துள்ளது.
* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,305 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 252,245 ஆக அதிகரித்துள்ளது.
* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,425 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,870 ஆக அதிகரித்துள்ளது.
* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,614 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,151 ஆக உயர்ந்துள்ளது.
* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,854 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114,533 ஆக அதிகரித்துள்ளது.
* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,903 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,288 ஆக அதிகரித்துள்ளது.
* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,928 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174,975 ஆக அதிகரித்துள்ளது.
* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,590 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,481 ஆக அதிகரித்துள்ளது.
* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,929  ஆக அதிகரித்துள்ளது.
* துருக்கியில் 4,007 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,872 பேரும், பிரேசில் நாட்டில் 13,993 பேரும், சுவீடன் நாட்டில் 3,529 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,472 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,506 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,220 ஆக அதிகரித்துள்ளது.
* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. இருப்பினும், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உகானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 10 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad