3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை - வறுமை காரணமா?

3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை - வறுமை காரணமா?
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்ற துளசி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவர், கூலித் தொழிலாளியாக இருந்தவர். அப்பகுதியில் சாமியாடியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது மனைவி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஆறுமுகம் தனது 12 வயது மகள் ராஜேஸ்வரியை வீட்டில் கொலை செய்துவிட்டு, சிறிய மகள் ஷாலினி (10), மகன் சேதுராமன் (8), ஆகிய இருவரையும் கை கால்களைக் கட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த மனைவி வீட்டில் தனது மகள் இறந்து கிடப்பதை பார்த்து விட்டு மற்ற மூவரையும் தேடி உள்ளார்.

சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகம் மற்றும் இரு குழந்தைகளை தேடியதில் ஆறுமுகம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், குழந்தைகளின் துணி கிணற்றின் அருகே கிடந்ததைத் தொடர்ந்து கிணற்றில் தேடி இரு குழந்தைகளின் உடல்களை வெளியே எடுத்தனர்.

அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 2 குழந்தைகளை தேடும்போது அருகே இருந்த கிணற்றில் ஷாலினி, சேதுராமன் இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம், ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்கள் மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆறுமுகம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Ad