மே.3- ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல்; ஊரடங்கிலிருந்து வெளியே வருவது பற்றி திட்டம் வகுத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!

மே.3- ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள  தேசிய ஊரடங்கு, அதற்கு பிறகும்  நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்பது பற்றி இன்னும் மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், மே 3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய இடைக்கால அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு இடைக்கால அறிக்கையை  முதல்வரிடம் தாக்கல் செய்தது.

ஊரடங்கிலிருந்து வெளியே வருவது பற்றி திட்டம் வகுத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அந்தக் கட்சி வழங்கியுள்ள யோசனைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருப்பதாவது, ”காங்கிரஸ் கட்சியின் கீழ்க்கண்ட யோசனைகளையும் அரசு உடனடியாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு:

1. 13 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 65,000 கோடி பணப்பரிமாற்றம் செய்து அவர்களுக்குப் பண உதவி செய்ய வேண்டும்.


2. குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ஒரு நிதி உதவித் திட்டத்தைச் (ஊதியப் பாதுகாப்பு, கடன் உத்தரவாதம் உட்பட) செயல்படுத்த வேண்டும்.

3. நடப்பு ஊரடங்கு காலம் மே 3 முடியும் போது இதிலிருந்து எப்படி படிப்படியாக வெளியில் வருவது என்பதற்கு இன்றே திட்டம் வகுத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

4. வருமான வரி கட்டுகின்ற, ஆனால் குறைந்த வருமானமுள்ளவர்களின் மாதச் சம்பளத்தைப் பாதுகாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url