Type Here to Get Search Results !

பெண் சீரழித்ததாக புகார்: நாகர்கோவில் காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி; குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, மகளுக்கு நண்பரையே திருமணம்: 3 நாளில் பெண் தற்கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
பெண் சீரழித்ததாக புகார்:குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

பெண் டாக்டர் புகார்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கி பழகினார். அவரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதோடு, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை.

உள்ளூர் பெண்கள் தொடங்கி, வெளிமாநில பெண்கள் வரை மோசடி செய்த காசியை, போலீஸார் வலையில் சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பல நேரங்களில் தோல்வியில் முடிந்துள்ளன. அதற்கு, காசியின் அரசியல் செல்வாக்கு, அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் தொடர்பு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது

அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது.

காசியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பெண் டாக்டர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார் காசி மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெண் டாக்டரை ஏமாற்றியது போல் பல பெண்களிடம் காசி பணம் பறித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதற்கிடையே காசியின் செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயரும், காசி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகியதோடு நகை, பணம் பறித்தார். மேலும், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காசி மீது கந்து வட்டி புகார் ஒன்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காசி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் வந்ததால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து நாங்குநேரி சிறையில் இருந்த காசியை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

மனு தாக்கல்

காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? காசியின் கூட்டாளிகள் யார்? என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எனவே காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து காசியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மகிளா குற்றவியல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்தார்.

3 நாட்கள் போலீஸ் காவல்

இதற்காக காசி பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அழைத்து வரப்பட்டார். இந்த மனு மீதான விசாரணையில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார். அதே சமயம் காசி தரப்பில் வக்கீல் மகேஷ் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை

இதை தொடர்ந்து காசியின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் காவலில் விசாரிக்க காசி அழைத்து செல்லப்பட்டார். போலீஸ் காவலில் காசியை விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியே வரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, மகளுக்கு நண்பரையே திருமணம்: 3 நாளில் பெண் தற்கொலை
குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, தன் மகளுக்குத் தந்தை வயதுள்ள நண்பரையே திருமணம் செய்து வைத்துள்ளார், மனம் நொறுங்கிய மணப் பெண், திருமணம் ஆன மூன்றே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம், வேலுார் மாவட்டத்தில் நடந்துள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வடுகந்தாங்கல் EB காலனியைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார் - சம்பூர்ணம் தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்; இந்த நிலையில் தாய் சம்பூர்ணம் ஆறு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்

குடிக்கு அடிமையான தந்தை சாந்தகுமாரும், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் 45 வயதான சங்கரும் நண்பர்கள்,  எப்போதும் மதுபோதையில் உள்ள சாந்தகுமாரின் குடும்பத்திற்கு அவ்வப்போது தன்னாலான உதவிகளை சங்கர் செய்து வந்துள்ளார்.

45 வயதாகியும் சங்கருக்கு திருமணம் ஆகாத நிலையில், தன் மகள் மகாலட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க சாந்தகுமார் முடிவு செய்துள்ளார். மகளின் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் 29 ஆம் தேதி விரிஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் நடத்தியுள்ளார்.

யாருக்கும் தெரியாமல் சங்கருக்கும் மகாலெட்சுமிக்கும் அந்தக் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன மூன்று நாட்களும் தம்பதி, மணமகள் வீட்டில் இருந்துள்ளனர்.

கனவுகளுடன் இருந்த மகாலட்சுமி, தனது தந்தையின் கட்டாய நடவடிக்கையால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மே 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாலட்சுமி.வீட்டிற்கு வந்த கணவர் சங்கர், மனைவி மகாலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த போலீசார், சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad