Type Here to Get Search Results !

சென்னை போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா தொற்று; விழுப்புரம் மாவட்டதில் மேலும் 17 பேருக்கு கொரோனா; கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சென்னை போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா தொற்று
சென்னையை கோடை வெயிலை விட, கொரோனா வாட்டி வதைக்கிறது. சென்னை போலீசாருக்கும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 23 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளையும் கொரோனா மிரட்ட ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பாதிப்பின் மிகப்பெரிய மையமாக மாறிவிட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் நேற்று கொரோனா பாதிப்பில் சிக்கினார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் சோதனை வளையத்தில் வைக்கப்பட்டனர். அவர் குணமாகி வரும் வரை வேறு அதிகாரி அண்ணாநகர் துணை கமிஷனர் பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார்.

சென்னை தலைமையக துணை கமிஷனரின் கார் டிரைவராக பணியாற்றும் போலீஸ் காரருக்கும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றார். இதனால் அந்த துணை கமிஷனரும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை போலீசில் கொரோனா பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

புளியந்தோப்பு துணை கமிஷனர்

புளியந்தோப்பு துணை கமிஷனர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதில், புளியந்தோப்பு துணை கமிஷனர் பொறுப்பை ஐகோர்ட்டு துணை கமிஷனர் சுந்தரவடிவேல் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது - திருமழிசையில் காய்கறி அங்காடி ஏற்பாடு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. இதர கடைகள் அனைத்தும் அடைக் கப்பட்டு உள்ளன. மார்க்கெட் வளாகம் முழுவதும் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியூர் சென்றவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் கடலூரில் 129 பேருக்கும், விழுப்புரத்தில் 76 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 7 பேருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் 63 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் மூடப்படுகிறது

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோயம் பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறி தங்குதடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

திருமழிசையில்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறியை வாங்கி கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

கோயம்பேடு சந்தை திடீரென திருமழிசைக்கு மாற்றப்படுவதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தகவல் தெரிவித்தார். காய்கறி சந்தையை மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறினார். அனைத்து வியாரிகள் கூட்டமைப்பினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் கூறினார்.

விழுப்புரம் மாவட்டதில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று தகவல்
விழுப்புரம் மாவட்டதில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. விழுப்புரம் தொற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரின் கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேரும் சென்னை கோயம்பேடு கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad