Type Here to Get Search Results !

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு: மதுபாட்டில்கள் வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு - டாஸ்மாக் அறிவிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு: மதுபாட்டில்கள் வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு - டாஸ்மாக் அறிவிப்பு
மதுபாட்டில் விலை ரூ.20 வரை உயர்த்தியுள்ளதாக  டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

மதுபாட்டில்கள் வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு
டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு
மேலானவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் மது விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளில் உரிய தடுப்புகள் அமைப்பது, எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டாஸ்மாக் திறப்பு ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும், நோய்த்தொற்றைப் பரவலாக்கும் - சீமான் எச்சரிக்கை
தனிமைப்படுத்தலும் தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad