Type Here to Get Search Results !

கொரோனா உறுதியானவருடன் ஒரே ரயில் பெட்டியில் பயணித்த அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம்; 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு

கொரோனா உறுதியானவருடன் ஒரே ரயில் பெட்டியில் பயணித்த அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருப்பது கட்டாயம்:  புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்துதல் தொடர்பாக புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், அனைத்துத்துறை கூடுதல் செயலாளர்கள், தமிழக போலீஸ் டிஜிபி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

*14,16 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள் அனைவரும்ம், தனிமைப்படுத்திக் கொள்ள இலவச/கட்டணம் முகாம்களா என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ள தெற்கு ரயில்வே வழிநடத்த வேண்டும்.

*14,16 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள் குறித்த முழு விவரங்களையும் சென்னை மாநகராட்சியிடம் தெற்கு ரயில்வே அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். பயணிகளின் முகவரி, பெயர், ரயில் பெட்டி எண்கள், போன் நம்பர் மற்றும் கட்டணம்/ இலவச முகாம்கள் குறித்த தகவல்களை சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

*ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றவுடன், ஒவ்வொரு ரயில் பெட்டிகளாக திறந்துவிடப்பட்டு பயணிகளை வெளியேற்ற வேண்டும். ஒரே ஒரு நுழைவாயிலில் மட்டும் பயணிகளை ரயிலில் இருந்து சமூக இடைவேளியுடன் வெளியே அனுப்ப வேண்டும்.

*சமூக இடைவேளியுடன் வரிசைப்படுத்தி, ரயில் பயணிகள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.

*ரயில் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களை முகாம்களில் தனிமைப்படுத்த வேண்டும். அரசால் அமைக்கப்பட்ட முகாம்களா ? அல்லது கட்டண ஹோட்டலா என்பதை தனிமைப்படுத்தப்படும் ரயில் பயணி தேர்வு செய்து கொள்ளலாம்.

*ரயில் நிலையத்திற்கு வெளியே நிற்கும் பேருந்துகள் மூலம் ரயில் பயணிகள் முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு பேருந்துகளிலும் சுமார் 25 பேர் சமூக இடைவேளியுடன் இடம் அமர்த்த வேண்டும்.

*ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு பிரெட், தண்ணீர், பிஸ்கட், வாழைப்பழம் ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வைத்திருக்க வேண்டும்.

*பின்னர் ரயில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையில் ரயில் பயணிக்கு பாஸிட்டிவ் என வந்தால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

*கொரோனா பரிசோதனையில் பயணிக்கு நெகட்டிவ் என வந்தால், அந்த நபரை அரசு ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் அவரது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

*எனினும் எவரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதியானால், அவர் பயணித்த ரயில் பெட்டிகளில் இருந்த அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கொள்ள வேண்டும். அரசால் அமைக்கப்பட்ட முகாம்களில் 7 நாட்களும் பிறகும் வீட்டுக் கண்காணிப்பில் 14 நாட்களும் ததனிமைப்படுத்தக் கொள்ள வேண்டும். ஆதலால் ரயில் பயணிகளின் முழு விவரத்தையும் தெற்கு ரயில்வே சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

*ஒரு வேளை , ரயில் பெட்டிகளில் பயணித்த அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என வந்தாலும் அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கொள்ள வேண்டும்.

50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு
வரும் திங்கள் கிழமை ( மே 18) முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும்  என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad