Type Here to Get Search Results !

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு; கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 25 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் 52 பேரும், அரியலூரில் 22 பேரும், கடலூரில் 17 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும், பெரம்பலூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் நேற்று முன்தினம் 2 பேருக்கும், பின்னர் நேற்று 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும்.  இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.  இதில் 8 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.  தொடர்ந்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் அருகே விதிமீறி சலூன் கடை நடத்தி வந்த நபருக்கு கடந்த வாரம் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  அதன்பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், சலூன் கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோயம்பேட்டில் வேலைபார்த்த பழ வியாபாரி, அவருடைய மகன், கோயம்பேடு  மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த கூலி தொழிலாளி உட்பட 4 கூலி தொழிலாளர்களுக்கு மற்றும் அங்கு பணியாற்றிய போலீஸ்காரர் உட்பட 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பூ, பழ மார்க்கெட்டை மாதவரத்துக்கு மாற்றவும், கோயம்பேடு சில்லறை விற்பனை கடையை மூடவும், மொத்த விற்பனை கடை  மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து நேற்று மட்டும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை  61 பேருக்கு கொரோனா இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல், கோயம்பேடு சென்று வந்த கடலூர் மாவட்டம் வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த 2 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேட்டிற்கு வியாபார ரீதியாகவும், பணி நிமித்தமாகவும் சென்று வந்தவர்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்த உத்தரவிட்டது. இதுவரை 700 பேர் கண்டறியப்பட்டு  அவர்கள் கடலூர், விருத்தாசலம், வேப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமை படுத்தப்பட்டுள்ள 700 பேரில் 550 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. விருத்தாசலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 27 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொண்டதில் 7 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைபோல், அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தவிர பெரம்பலூர் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சின்னக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று ஒருநாள் கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் கடும் பீதியில் உள்ளனர்.

கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று
கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 25 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad