Type Here to Get Search Results !

இந்தியாவில் 10 மாத காலத்தில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும்: யுனிசெப்; கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

இந்தியாவில் 10 மாத காலத்தில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும்: யுனிசெப் தகவல்
கொரோனாவை சர்வதேச நோய் பரவலாக அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. தாய்மார்கள் தினம் வரும் 10ம் தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி ஐநா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கொரோனா பாதிப்புள்ள மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியுள்ளதாவது: கொரோனாவை சர்வதேச பரவலாக அறிவித்துள்ள மார்ச்  முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும்.

அதாவது மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான இந்த காலத்தில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும். இதேபோல் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜிரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும். கடந்த ஜனவரி முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் 2.41 கோடி குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை ஆபத்து நிறைந்ததாக இருக்கும். போதுமான அளவுக்கு உபகரணங்கள், நர்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும். கொரோனா தொற்றால் மிக செல்வவளமிக்க நாடான அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மார்ச்- டிசம்பர் காலக்கட்டத்தில் 33 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி: முக்கிய நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும்  பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில்  சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.

 ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad