Type Here to Get Search Results !

சென்னையில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் சாவு

தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் சாவு
தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையால் தனது மகள் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசில் இளம்பெண்ணின் தந்தை புகார் செய்து உள்ளார்.

full-width செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சங்கீதா (வயது 22). தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தீபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அரை மணிநேரத்துக்குள் சங்கீதா ரத்த வாந்தி எடுத்தார். 21-ந் தேதியும் ரத்த வாந்தி எடுத்த அவர், சுயநினைவை இழந்தார். இது குறித்து கிருஷ்ணன், டாக்டர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்கிறோம் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கிருஷ்ணனிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர்.

இதுபற்றி அவர், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன், தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்ட தவறான சிகிச்சையால்தான் தனது மகள் உயிரிழந்ததாகவும், அந்த ஆஸ்பத்திரி மற்றும் தனது மகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணன் மீண்டும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, அறுவை சிகிச்சையினபோது டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக இளம்பெண் இறந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும். அதன்பிறகு உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.

போலீசுக்கு பயந்து ஓடியபோது கல்குவாரி குட்டையில் விழுந்த வாலிபர் பலி
மூவரசம்பேட்டையில் போலீசுக்கு பயந்து ஓடியபோது கல்குவாரி குட்டையில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 24). இவரது நண்பர்களான ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த டேவிட் (24), விமல்ராஜ் (23), சந்தோஷ் (24) உள்பட 5 பேரும் மூவசரம்பட்டு கல்குவாரி குட்டை அருகே மதுபோதையில் இருந்தனர்.

அப்போது ரிஸ்வான், டேவிட் ஆகியோரிடம் பணம் குறித்த தகராறில் விமல்ராஜ், சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டனர். இதை கண்ட அந்த பகுதியினர் பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் வருவதை கண்டதும் அனைவரும் ஓடினார்கள். அப்போது ரிஸ்வான் எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

மேலும் அவரை தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. பின்னர் கிண்டி தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி ரிஸ்வான் உடலை மீட்டனர். இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறில் டேவிட்டிடம் செல்போனை பறித்ததாக அம்பேத்கார் நகரை சேர்ந்த விமல்ராஜ், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்: சிவகங்கையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டவர் திடீர் சாவு
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததால், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டவர் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 47 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற 42 பேருக்கும் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த 42 பேரில் எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரும் ஒருவர் ஆவார். தனி வார்டில் இருந்த அவர் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-

தற்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த முதியவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததாக கடந்த 1-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் அவரை மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad