Type Here to Get Search Results !

சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி; போலீசார், சுகாதர பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து- சுகாதாரத்துறை

சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுக்கு முன்பே பதிவுபெற்ற அத்தியாவசிமற்ற பொருட்களின் கடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனித்தனியாக செயல்படும் கடைகளையும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திறந்திருக்கும் கடைகளில் 50 சதவீத அளவு ஊழியர்கள் முககவசத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மத்திய அரசின் அறிவிப்பால் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் சிறிய கடைகள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.அதே நேரத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது. பதிவு சட்டத்தின் கீழ் மதுக்கடைகள் வராது என்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசு முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதிகளில் இந்த தளர்வு பொருந்தாது.


போலீசார், சுகாதர பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து- சுகாதாரத்துறை
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்பட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவற்றை வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம்: மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை
வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி  வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பள்ளி,கல்லூரிகளில் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

2019-20ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாத நிலையில் அவை அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகே மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைக்க முடியும் என்பதால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது, ஆன்லைனில் நடத்துவதா? வகுப்புகளை எப்போது தொடங்குவது? என்பது குறித்து ஆராய 7 பேர் கொண்ட 2 கமிட்டிகளை பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கியது.

வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஜூலை மாதத்துக்கு பதில் செப்டம்பரில் தொடங்கலாம்,  நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று என்று ஒரு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகளை உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் ஊரடங்கு முடிந்த உடன், சூழலைப் பொறுத்து நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தலாம் என்றும் மற்றொரு கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிக்கையை 10 நாட்களில் வெளியிட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad