Type Here to Get Search Results !

சென்னை மாநகராட்சியில் 452 பேருக்குக் கொரோனா பாதிப்பு; மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு - முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கோடம்பாக்கத்தில் 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 133 பேரும், தடையார்ப்பேட்டையில் 59 பேரும், திருவிக நகரில் 55 பேரும், தேனாம்பேட்டையில் 53 பேரும், கோடம்பாக்கத்தில் 52 பேரும், அண்ணாநகரில் 39 பேரும் உள்ளனர். மேலும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும்,  அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.19% பேரும், பெண்கள் 34.81% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 91 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 91 பேருக்கும் தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 8 பேரும், 80 வயதுக்கு மேல் 8 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 35 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 77 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 74 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 39 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 19 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

வயது வாரியாக பாதித்தோர் எண்ணிக்கை:

0-9 வயது - 8

10-19 வயது - 35

20-29 வயது - 91

30-39 வயது =-99

40-49 வயது - 77

50-59 வயது - 74

60-69 வயது - 39

70-79 வயது - 19

80 வயது - 9

சென்னையில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா அறிகுறிகள் பரிசோதனையில் இதுவரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 662 பேரிடம் முழுமையாக பரிசோதனை நடத்தியதில், 9 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 685 நபருக்கு அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும், தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர வேண்டும் எனவும் முதல் அமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது.  இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகிறது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணி நீட்டிக்கப்படவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்க பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad