Type Here to Get Search Results !

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் - ஹர்ஷவர்தன்; கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு

ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளர்.
சீனாவின் இரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், வாங்கிய நிறுவனங்களிடமே திருப்பி அனுப்பி விடுமாறும் இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக தொற்று பதிவாகவில்லை என்று தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு, நீடிக்கப்படுமா இல்லை தளர்வு செய்யப்படுமா என்று மக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

ஊரடங்கு குறித்து மே 3 க்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை கொரோனா வைரசால் 29,435 பேர் பாதிக்கப்பட்டு, 934 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே இதுவரை 6,869 பேர் குணமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயோடெக்னாலஜி துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; தொற்று இரட்டிப்பு விகிதமும்  கடந்த 3 தினங்களாக 10.9 நாட்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருக்கிறது என்றார்.

47 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதுடன், 39 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய தொற்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் எந்த தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தற்காப்பு உடைகள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பதற்காக 100 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ரேபிட் டெஸ்ட் கருவிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

மே மாதத்தில் ஆர்டி- பிசிஆர் சோதனைக் கருவிகளை மே மாதத்தில் நம்மால் தயார் செய்ய முடியும். மே 31 ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் டெஸ்ட் கிட்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.  இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை . கடந்த 28 நாட்களாக 17 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை” என்றார்.

கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு
சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது.

சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.மேலும், ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் சீனா சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையின் பெண் வீரர் ஒருவரே சீனா உகானில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாட்ஜே பெனாஸி என்ற அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை வீரர் முதன் முறையாக மனந்திறந்துள்ளார்.

சீனாவின் சமூக வலைப்பக்கங்களில் தமது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு, தாம் உலகின் முதல் கொரோனா நோயாளி எனவும் பரப்பப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.ஆனால் கொரோனா அறிகுறிகளோ, அல்லது கொரோனா சோதனைகளில் இதுவரை தமக்கு பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அரசு திட்டமிட்டே, கடந்த அக்டோபரில் கொரோனாவை உகானில் பரப்பியதாகவும்,அப்போது உகானில் நடத்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னரே, கொரோனா பரவியதாகவும் சீனாவில் தகவல் பரப்பப்படுகிறது.

மார்ச் துவக்கத்தில் இதுபோன்ற தகவல் பரவியதும், தமக்கும் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக பெனாஸி தெரிவித்துள்ளார்.கொரோனா பரவத் தொடங்கிய துவக்க காலகட்டத்திலேயே, இது திட்டமிடப்பட்ட உயிரியல் ஆயுதம் எனவும், அமெரிக்காவுக்கு இதில் கட்டாயம் பங்கிருக்கும் எனவும் தகவல் பரப்பப்பட்டது.

தற்போது அமெரிக்க ராணுவ ரிசர்வ் படை ஊழியர் மீது கவனம் திருப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உகானில் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட பெனாஸி, கடைசி கட்டத்தில் விபத்துக்குள்ளாகி போட்டியில் இருந்து விலக நேர்ந்துள்ளது.

அந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு உடைந்து கொஞ்சம் ஆபத்தான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். பெனாஸி மீது சீனா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் கவனம் செலுத்த காரணமே ஒரு அமெரிக்கர் எனவும்,59 வயதான அந்த நபர், தமது யூடியூப் பக்கத்தில், கொரோனா வைரஸ் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டது எனவும்,சீனாவை கட்டுக்குள் கொண்டுவர, பெனாஸி மூலம் உகானில் பரப்பப்பட்டது எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னரே பெனாஸிக்கு கொலை மிரட்டலும் , அவதூறு கடிதங்களும் அவருக்கு குவியத்தொடங்கின.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad