Type Here to Get Search Results !

கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடும் தமிழகத்தின் முதல் மாவட்டம்; மதுரையில் எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு

தொடக்கத்தில் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த ஈரோடு, இன்று மாலை முதல் கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் குணமடைய உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டபோது, தொடக்கத்தில் அதிக தொற்றுகளை சந்தித்த ஈரோடு, இன்று முதல் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை நேற்றுவெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 1312 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக உயிரிழப்பு இல்லாததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 81 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 1101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 26 பேர் குணமடைந்துள்ளனர். 29, 797 பேர் விடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மையங்களில் 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த ஈரோடு, இன்று மாலை முதல் கொரோனாவின் பிடியில் இருந்து முற்றிலும் குணமடைய உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக எந்த தொற்று பரவலும் உறுதி செய்யப்படவில்லை. இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 70 பேரும் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினர்.

சிகிச்சையில் இருந்த கடைசி நான்கு கொரோனா நோயாளிகளும் இன்று மாலை வீடு திரும்புகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறுகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த ஈரோடு, தற்போது பச்சை மண்டலமாக மாற உள்ளது.

மதுரையில் எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு
மதுரையில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன், மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது. மதுரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மதுரை நகர் தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் சிறப்பு எஸ்ஐ மற்றும் ஏட்டு ஆகிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்கள் 2 பேரும் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 71 போலீசாருக்கும், மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கும் மாநகராட்சி சார்பில் திடீர் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஸ்வாப் முறையில் நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் யாரும் செல்ல வேண்டாம் என மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் நேற்று முன்தினம் இரவு மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மாற்று இடம் கிடைக்கும் வரை ஸ்டேஷன் முன்புள்ள சாலையில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. விரைவில் மாற்று கட்டிடம் பிடித்து அதில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். இதேபோல் மீனாட்சியம்மன் கோயில் மேற்கு கோபுர வாசலில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறன்றனர். இதில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி விற்பனை சந்தை தற்காலிகமாக இடமாற்றம்
மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி விற்பனை சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை பாண்டிகோவில், அம்மா திடலில் தற்காலிக காய்கறி மொத்த சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad