Type Here to Get Search Results !

கொரோனாவால் நியூயார்க் நகரம் பாதிக்கப்பட்டது எப்படி?

நியூயார்க் நகரில் மற்ற நாடுகளை விட  கொரோனா பாதிப்பு அதிகமானது எப்படி என்பது குறித்து ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
உலகில் நேற்று ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. அதனுடன் சேர்த்து, உலகில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் 1,783 பேர் இறந்துள்ளனர். இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று 7000 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரம் 700 ஐ தாண்டியுள்ளது.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நியூயார்க் மாநிலத்தில் மட்டும் ஒரு மில்லியன் 59 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி 3 வது இடத்திலும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் 4 மற்றும் 5 வது இடங்களிலும் உள்ளன.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 18 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளனர். இதற்கடுத்து அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதன்முறையாக 2-வது இடத்தை நேற்று பிடித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 600 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதற்கடுத்து 3-வது இடத்திலுள்ள ஸ்பெயினில் 15 ஆயிரத்து 500 பேரும், 4-வது இடத்திலுள்ள பிரான்சில் 12 ஆயிரத்து 200 பேரும், 5-வது இடத்திலுள்ள பிரிட்டனில் 7 ஆயிரத்து 900 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் ஆறாம் இடத்தில் உள்ள இங்கிலாந்தில் இதுவரை 7978 பேர் பலியாகியுள்ள நிலையில், நியூயார்க்கில் மட்டும் 7067 பேர் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மற்ற நாடுகளின் முக்கிய நகரங்களில் இல்லாத அளவு நியூயார்க்கில் மூன்று மடங்கு அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார் நகரம் கொரொனாவால் பாதிக்கபட்டது எப்படி என்பது குறித்து  எகிப்தின் சினாய் மவுண்டில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் மரபியலாளர் ஹார்ம் வான் பேகல் விளக்கியுள்ளார். “அமெரிக்காவில் பரவியுள்ள பெரும்பாலான வைரஸ் தொற்று ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதே தவிர ஆசியாவிலிருந்து இல்லை. முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி நியூயார்க்கில் கண்டுபிடிப்பதற்குச் சில வாரங்கள் முன்னதாகவே அதாவது பிப்ரவரி மாதம் தொடக்கத்திலே அங்கு வைரஸ் சுழற்சி இருந்துள்ளது.

சீனாவில் வைரஸ் தொற்று உறுதியானதும் அங்கிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு மட்டுமே டிரம்ப் தடை விதித்தார். ஆனால் ஐரோப்பாவைச் சேர்ந்த பலர் அமெரிக்காவுக்குள் மிகச் சாதாரணமாக வந்து சென்றனர். அவர்களால்தான் பெருமளவில் அமெரிக்காவில் வைரஸ் பரவியுள்ளது. சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் பரவியுள்ள வைரஸ் வகை மாதிரிகளை ஆராய்ந்ததில் ஐரோப்பிய வைரஸ் மாதிரிகளே அமெரிக்காவில் பிரதானமாகப் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே ஆசிய நாடான சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் பரவவில்லை.

மார்ச் மாதம் தொடக்கத்தில் தான் நியூயார்க்கில் மரபணு சோதனை செய்யப்பட்டது. அதை பிப்ரவரி மாதமே செய்திருந்தால் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். இனிமேலாவது முறையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே வைரஸ் பரவல் குறையும் ” எனத் தெரிவித்துள்ளார்.
full-width

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad