Type Here to Get Search Results !

தளர்த்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள்; எவை இயங்கும்? எவை இயங்காது? மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 26 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இதில் எவை இயங்கும்? எவை இயங்காது என்பது குறித்து மத்திய அரசு வெளியிட்ட பட்டியலை பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அதன்படி, தீவிர பாதிப்பு இல்லாத பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள் மற்றும் தொழில்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகளும் செயல்படும். பொது வினியோகம், நிதி, சமூகநலம் உள்ளிட்ட துறைகள் இயங்கும். வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலில் ஈடுபடலாம்.  100 நாள் வேலை திட்டம், தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி உண்டு. 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் மற்றும்  கிராமப்புற தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு வரும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும், ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கும், கட்டுமானத் தொழிலை தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சில நிறுவனங்களுக்கு தளர்த்துவது குறித்த நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் பரிந்துரையை இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.

தமிழகத்தில் 21 பேர் அடங்கிய குழு தலைமை செயலகத்தில் ஆலோசனை தமிழகத்தில் நாளை முதல் எந்தெந்த பணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு? முடிவுகள் அறிவிக்காததால் மக்கள் குழப்பம்
தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க நியமித்த 21 பேர் அடங்கிய குழு நேற்று தலைமை செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். ஆனால் இதில் எடுத்த முடிவுகளை நேற்றே அறிவிக்காததால் நாளை முதல் ஊரடங்கு தளர்வு இருக்குமா? என்பதில் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை (20ம் தேதி) முதல் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம், எந்தெந்த பணிகளுக்கு தளர்வு? என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கலாம், பொருளாதார சீரமைப்புக்காக  என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்பது பற்றி அரசுக்கு  வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து தலைமை செயலாளர் சண்முகம் 2 நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டார்.

இந்த நிபுணர் குழுவினர், நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். முன்னதாக நேற்று முன்தினமும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 20ம் தேதி (நாளை) முதல் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது பற்றியும், எந்தெந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிப்பது, அப்படி அனுமதி அளிக்கும்போது என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவுக்கு பிறகு இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடியிடம் நிதித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்வார்.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இல்லை. சேலத்தில், சொந்த ஊரில் இருக்கிறார். இன்று மாலை அல்லது இரவுதான் முதல்வர் சென்னை வருவார் என்று கூறப்படுகிறது. சென்னை, வந்த பிறகு நிபுணர் குழுவின் அறிக்கையின்படி சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் 20ம் தேதிக்கு பிறகு என்னென்ன பணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து இன்று மாலை அல்லது நாளைதான் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் சேலத்தில் நிருபர்களிடம் கூறும்போது, “20ம் தேதிக்கு (நாளை) பிறகு எல்லா தொழிற்சாலைகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படவில்லை. என்னென்ன தொழிற்சாலைகள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தான் உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த உயர்மட்ட குழு ஆய்வு செய்து எந்தெந்த தொழிற்சாலைகளை துவக்குவதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று திங்கட்கிழமை (நாளை) அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன் அடிப்படையில் அரசு அறிவிக்கும். கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம், தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட நகர்ப்புற, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதிக்கவில்லை” என்றார்.

அதேநேரம் அரசு அலுவலகங்கள், சில தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு 20ம் தேதிக்கு (நாளை) பிறகு செயல்படலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதேநேரம் ஊரடங்கு தளர்வு என்று அறிவித்துள்ள 20ம் தேதி (நாளை) தான் தமிழக அரசு இதுபற்றி அறிவிக்கும் என்று அறிவித்துள்ளதால், பஸ்கள், ரயில் ஓடாமல் எப்படி பணிக்கு வருவது என்பதில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு; நிபுணர் குழு அறிக்கை இன்று தாக்கல்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரசிடம் இன்று அறிக்கை அளிக்கிறது. இதை ஆய்வு செய்து முடிவுகளை முதல்வர் அறிவிப்பார். எனவே மறு உத்தரவு வரும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர் இழப்புகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடைந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. வைரஸ் தொற்றின் பரவல் குறையாததால் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையின்படி பிரதமர் மோடி. மே 3ம் தேதி வரை மீண்டும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஏப்ரல் 20ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்படும், என தெரிவித்தார்.

அதன்படி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், ஏப்ரல் 20ம் தேதி(இன்று) முதல் விவசாயம் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடி தொழில், ஆன்லைன் வர்த்தகம், 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள், கிராமப்புற தொழிற்சாலைகளை திறக்கவும், 100 நாள் வேலை திட்டம், கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அனுமதி தரப்பட்டது.

அதே சமயம், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சிகப்பு மண்டலங்களுக்கு (ஹாட்ஸ்பாட்) இந்த தளர்வு பொருந்தாது என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. மேலும் அந்தந்த மாநில அரசுகளும் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றின் பரவல் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்று வரை 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் இறந்துள்ளனர். எனவே தற்போது ஊரடங்கை தளர்த்தினால், மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். எளிதில், எல்லோரும் எதோ ஒரு காரணம் சொல்லி வெளியே வரக்கூடும். எனவே மத்திய அரசு அறிவித்தாலும், பாதிப்பில் 3வது இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு உடனே தளர்வு ஏற்படுத்துவது அவ்வளவு எளிதில்லை. இதனால், இன்று முதல் எந்தெந்த நிறுவனங்கள் இயங்கும் என்பதில் தெளிவு இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்தநிலையில், தமிழக அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:  மத்திய அரசு வெளியிட்ட ஆணையின்படி, 20ம் தேதிக்கு(இன்று) பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது.

அந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் இன்று தெரிவிக்க உள்ளது. இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். எனவே இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ள 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது

அந்த குழுக்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் பகல் 12.30 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad