Type Here to Get Search Results !

தமிழகத்தில் 1,477 பேருக்கு கொரோனா; சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
ஒருவர் ராயபுரம் பகுதியிலிருந்து வந்து செல்பவர். அவருடன் தொடர்பில் வந்தவர்கள் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு இன்று வேகமாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில், சென்னையில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆவர். இதில் இருவர் விடுதியில் தங்கியிருந்ததால் விடுதி மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன்ர். ஒருவர் ராயபுரம் பகுதியிலிருந்து வந்து செல்பவர். அவருடன் தொடர்பில் வந்தவர்கள் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே இருதயவியல் துறையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கும் செவிலியருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருதயவியல் சிகிச்சைக்கான கட்டிடம் மூடப்பட்டுள்ளது. இருதய அவசர சிகிச்சைகள் மட்டும் மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இவர்களுக்கு இருதய நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது தொற்று ஏற்பட்டது. இதன்மூலம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நான்கு மருத்துவர்கள் ஒரு செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,477 பேருக்கு கொரோனா; சென்னையில் திடீர் அதிகரிப்பு
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235-ஆக இருந்த நிலையில் இன்று 285 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நேற்று வரை 1372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றுவரை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235-ஆக இருந்த நிலையில் இன்று 285 ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 46. இதுவரை மொத்தமாக 411 பேர் வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 - ஆக அதிகரித்துள்ளது. 1048 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,381-ஆக உள்ளது.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 66.67% பேரும், பெண்கள் 33.33% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 235 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 53 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேரும், திருவிக நகரில் 34 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 26 பேரும், கோடம்பாக்கத்தில் 26 பேரும்,  அண்ணாநகரில் 24 பேரும்,   தேனாம்பேட்டையில் 19 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. ராயபுரத்தில் 12 பேரும், அண்ணாநகரில் 10 பேரும், கோடம்பாக்கத்தில் 9, தேனாம்பேட்டையில் 6, வளசரவாக்கத்தில் 3 பேரும், மாதவரம், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் தலா 2 பேரும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 1 நபரும் குணமடைந்து உள்ளனர்.

சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை.

மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்
திருவொற்றியூர் - 5 - 0 - 0
மணலி - 0 - 0 - 0
மாதவரம் - 3 - 0 - 2
தண்டையார்பேட்டை - 26 - 1 - 0
ராயபுரம் - 73 - 5 - 12
திருவிக நகர் - 34 - 1 - 5
அம்பத்தூர் - 0 - 0 - 0
அண்ணாநகர் - 24 - 0 - 10
தேனாம்பேட்டை - 19 - 0 - 6
கோடம்பாக்கம் - 26 - 0 - 9
வளசரவாக்கம் - 5 - 0 - 3
ஆலந்தூர் - 3 - 0 - 1
அடையார் - 7 - 0 - 2
பெருங்குடி - 7 - 0 - 2
சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1

வயது = பாதித்தோர் எண்ணிக்கை
0-9 = 2
10-19 = 17
20-29 = 34
30-39 = 53
40-49 = 43
50-59 = 42
60-69 = 25
70-79 = 15
80 = 3

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 66.67% பேரும், பெண்கள் 33.33% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 53 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 2 நபரும், 80 வயதுக்கு மேல் 3 நபரும் பாதித்து உள்ளனர்.10 முதல் 19 வயதுள்ளோர் 17 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 34 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 43 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 42 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 25 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 15 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னையில் 3 நடமாடும் ‘கொரோனா’ பரிசோதனை மையம்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னையில் 3 நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் இன்று முதல் பணியை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் உடல்நலம் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகிய ‘கொரோனா’ அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். எனப்படும் நவீன பாதுகாப்பு கருவி மூலம் தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. சென்னையில் 25 இடங்களில் பி.சி.ஆர். சோதனை மையம் இயங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பி.சி.ஆர். சோதனை மையங்களுக்கு செல்வதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘ஆம்புலன்ஸ்’ போன்ற வாகனத்தில் பி.சி.ஆர். கருவிகளை பொருத்தி நடமாடும் சோதனை மையம் அமைக்கப்பட்டது. 3 வாகனங்கள் இது போன்று வடிவமைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ‘வாகனத்தின் உள்ளே இருந்து வெளியே இருப்பவர்களிடம் பேச முடியவில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர், அந்த வாகனங்களின் உள்ளே இருந்து பேசினால் வெளியே கேட்கும் வகையில் ‘ஸ்பீக்கர்’ கருவி பொருத்த உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த 3 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களில் ‘ஸ்பீக்கர்’ கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ‘கொரோனா’ பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் இன்று முதல் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad