Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 58 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911-லிருந்து 969 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911-லிருந்து 969 -ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தலைமைச் செயலாளர் கே சண்முகம் தெரிவித்துள்ளார்.

full-width இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேர் உள்ளதாகவும், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 71 பேருக்கு கொரோனா அறிகுறி பரிசோதனை.

தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உட்பட்டே கொரோனா பாதிப்பு.

நாளை பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு.

முன்னதாக, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் கட்டத்திலிருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயன்று வருவதாகவும் கூறினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வியாழக்கிழமை இரவுக்குள் கொரோனாவைச் சோதனை செய்வதற்காந 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடுமெனத் தெரிவித்தார்.

முன்னதாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  அனைத்து மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை  கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணி, தமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad