Type Here to Get Search Results !

முழு ஊரடங்கால் சென்னை, கோவை, மதுரையில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்: சமூக விலகல் எங்கே? சென்னையில் காய்கறி, மளிகை கடைகளுக்கு 3 மணி வரை இன்று அனுமதி

முழு ஊரடங்கால் சென்னை, கோவை, மதுரையில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்: சமூக விலகல் எங்கே?
பெருநகரங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இன்று காய்கறிகளை வாங்க மார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்தனர். சமூக விலகல் கடைப்பிடிக்காமல் மக்கள் முண்டியடித்தது ஆபத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது.

சென்னையில் காய்கறி, மளிகை கடைகளுக்கு 3 மணி வரை இன்று அனுமதி
நாளை முதல் புதன்கிழமை வரையிலான காலக்கட்டத்தில் காய்கறி கடைகள் திறந்திருக்கும் என்றும், மளிகை கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் காய்கறி, மளிகை கடைகளுக்கு 3 மணி வரை இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகரங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள வசதியாக இன்று மாலை 3 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அம்மா உணவகம், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசியமல்லாத மற்ற எந்த வணிகங்களுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நாளை முதல் புதன்கிழமை வரையிலான காலக்கட்டத்தில் காய்கறி கடைகள் திறந்திருக்கும் என்றும், மளிகை கடைகள் மூடப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.  காய்கறிகளை விற்கும் மளிகைக் கடை இருந்தால் கடையை மூட வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தளங்களில் காய்கறிகளை விற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், நிபந்தனைகளுடன் கோயம்பேடு மார்கெட் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad