Type Here to Get Search Results !

பிரதமர் மோடி நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப் 20-க்கு மேல் சில பணிகளுக்கு விதிவிலக்கு; நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடியவுள்ள நிலையில், நாட்டு மக்களுடன் உரையாற்றி வரும், பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்று வரை (14ந்தேதி) நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.  அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தீவிரமுடன் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிரமுடன் செயலாற்றி வருகிறது.  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றுகிறார் என தகவல் வெளியானது.  இந்த உரையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பினை பிரதமர் மோடி வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து உள்ளோம்.  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவாலேயே இது சாத்தியப்பட்டது என கூறினார்.  இந்த உரையில், நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி கொரோனா பரவரை மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை, மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர். ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. ஊரடங்கால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை, சிறப்பான பாதையில் செல்கிறது.

கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக தவிர்த்துள்ளது. கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையங்களில் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தினோம். இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தும் முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது. சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டுகிறது என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த ஒருவார காலம் முக்கியமானது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் நிலை குறித்து ஆராயப்படும். ஏற்கெனவே ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. ஊரடங்கு உத்தரவு தொடர்பான வழிபாட்டு நெறிமுறைகள் நாளை அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad