Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 24,506-ஆக உயர்வு; கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் 15-வது இடத்தில் இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 24,506-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077லிருந்து 24,506ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718லிருந்து 775-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,749லிருந்து 5,063-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் 15-வது இடத்தில் இந்தியா
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முதலிடம் பிடித்துள்ளன. ஆபத்து அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆக்டபஸ் கரங்களை விரித்துள்ள நிலையில், இந்த பெருந்தொற்றை உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டுள்ளன என்பதை Deep Knowledge group என்ற சர்வதேச அரசுசாரா நிறுவனம் ஆராய்ந்துள்ளது.

ஊரடங்கை சரியாக பின்பற்றல், நோய் கண்காணிப்பு, நோயை கண்டறிதல், அரசின் நடவடிக்கை மருந்து விநியோகம் மற்றும் அவசரத்தை எதிர்கொள்வது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது. பலம் பொருந்திய அமெரிக்காவும், பிரிட்டனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. அவற்றை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அரபுநாடான ஈரான் 7வது இடத்தையும், ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் 9வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 15வது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பாதிப்பு பரவும் ஆபத்து குறைவான நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனி இரண்டாவது இடத்தையும், தென்கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில், ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தாய்வான், சிங்கப்பூர், ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தை ஆசிய நாடுகளான சீனாவும், தென்கொரியாவும் பிடித்துள்ளன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்வான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து பாதுகாப்பதில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad