திண்டுக்கல்லில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திண்டுக்கல்லில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173-லிருந்து 1204-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்வு

திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இன்று 31 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

மொத்தம் 81 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சென்னையில் மேலும் 5 பேர் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;

மாவட்டம் கொரோனவால் பாதிக்கப்பட்டோர்  13.04.2020 வரை 14.04.2020 மொத்தம்
சென்னை 205 5 210
கோவை 126 126
திருப்பூர் 78 78
ஈரோடு 64 64
திண்டுக்கல் 56 9 65
திருநெல்வேலி  56 56
நாமக்கல் 45 45
செங்கல்பட்டு 45 45
திருச்சி 43 43
தேனி 41 41
கரூர் 40 40
ராணிப்பேட்டை 39 39
மதுரை 39 2 41
திருவள்ளூர் 33 33
நாகப்பட்டினம் 29 2 31
தூத்துக்குடி 26 26
விழுப்புரம் 23 23
கடலூர் 19 1 20
சேலம் 18 1 19
திருப்பத்தூர் 17 17
விருதுநகர் 17 17
திருவாரூர் 16 16
வேலூர் 16 16
கன்னியாகுமரி 15 1 16
திருவண்ணாமலை 12 12
தஞ்சாவூர் 11 4 15
சிவகங்கை 10 1 11
நீலகிரி 9 9
காஞ்சிபுரம் 8 8
தென்காசி 5 3 8
ராமநாதபுரம் 5 2 7
கள்ளக்குறிச்சி 3 3
அரியலூர் 1 1
பெரம்பலூர் 1 1
மொத்தம் 1173 31 1204
தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. இரண்டாவது நிலையில் தான் உள்ளோம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு சோதனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக பார்க்கையில் திண்டுக்கல்லில் இன்று அதிகபட்சமாக 9 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக சென்னையில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் சென்னையில் 210 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கோவையில் 126 பேரும், ஈரோட்டில் 64 பேரும் திருப்பூரில் 79 பேரும், திண்டுக்கல்லில் 65 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url