கொரோனா தடுப்பு பணிக்காக: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி; 10,000 கூலித்தொழிலாளர்களுக்கு உணவு வழங்குகிறார் தமன்னா

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு - ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்), பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் விஜய். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்த 10,000 கூலித்தொழிலாளர்களுக்கு உணவு வழங்குகிறார் தமன்னா
நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த கொரோனா தொற்றுக்கு இடையில், தினக்கூலி தொழிலாளர்களைக் குறித்து சிந்திப்பது அவசியம்” என்று தெரிவித்திருக்கிறார்.

letsallhelp என்னும் அரசு சாரா அமைப்புடன் கைகோர்த்திருக்கும் நடிகை தமன்னா, மும்பையின் குடிசைப்பகுதி, முதியோர் இல்லம், காப்பகங்கள், இடம்பெயர்வுத் தொழிலாளர்கள் என 10,000 பேருக்கான 50 டன் உணவுக்கான தொகையை வழங்கியிருக்கிறார் தமன்னா.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “யாரும் பசியுடன் உறங்கச்செல்லக்கூடாது என்பதை உறுதியாக ஏற்போம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவுவதனால், அவர்கள் உணவுக்கு வழியில்லாமல் தங்கள் கிராமங்களை நோக்கி செல்லமாட்டார்கள். நகரங்களிலேயே தங்கி பட்டினி கிடக்கமாட்டார்கள் என நம்புகிறேன். இந்த தன்னார்வ அமைப்பின் மூலம் உணவு தேவைப்படும் தொழிலாளர்களுக்கு சென்றடையும்.

நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த கொரோனா தொற்றுக்கு இடையில், தினக்கூலி தொழிலாளர்களைக் குறித்து சிந்திப்பது அவசியம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url