Type Here to Get Search Results !

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரம்; அமெரிக்காவில் கொரோனாவுக்கு 45 ஆயிரம் பேர் பலி: ஒரு வாரத்தில் இரட்டிப்பு

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 1 லட்சத்து 74 ஆயிரத்தை தாண்டியது. இதில், மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள், ஐரோப்பா கண்டத்தில் நடந்துள்ளன. அங்கு 1 லட்சத்து 7 ஆயிரம்பேர் வரை பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இத்தாலியில் 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பிரான்ஸ் நாட்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்படுவதால், உண்மையான நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 430 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டி விட்டது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை 27-ந் தேதியில் இருந்து தளர்த்துவது குறித்து ஸ்பெயின் அரசு பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியது.  எனினும், அந்நகரில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.  ஆனால் வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர்.  இது கடந்த ஒரு வார காலத்தில் இரட்டிப்படைந்து உள்ளது.  இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

இவர்களில் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 555 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  நியூஜெர்சியில் 92 ஆயிரத்து 387 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

நியூயார்க் நகரில் 19 ஆயிரத்து 693 பேரும், நியூஜெர்சியில் 4 ஆயிரத்து 753 பேரும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் 12 நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தினை கடந்து உள்ளது.  இதேபோன்று 5 நகரங்கள், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கு உட்பட்ட பாதிப்படைந்தோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 177,608 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,556,512 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 690,263 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,250 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,259 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 45,318 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 818,744 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24,648 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183,957 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,282 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 204,178 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,796 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158,050 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,337 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129,044 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,297 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,802 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,998 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,956 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,086 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,453 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,134 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,758 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,259 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,478 பேரும், பிரேசில் நாட்டில் 2,741 பேரும், சுவீடன் நாட்டில் 1,765 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad