காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் பின்னணியில் அரசியல் இருக்கு.. கமல்

அரசியலுக்காகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஃபிக்கி கருத்தரங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் ஜீவாதாரம் சிறு தொழில் முனைவோர் ஆவர். அவர்களைத்தான் ஊக்குவிக்க வேண்டும்.


காவிரியில் அரசியல் விளையாடுகிறது- அதனால்தான் தீர்வு ஏற்படவில்லை. அரசியலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. விவசாயிகளிடம் இப்பிரச்சனையை கொடுத்துவிட்டால் தீர்வு வரும். காவிரி பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணவும் முடியும். மத்தியில் கூட்டாட்சிதான் தேவை. மாநிலத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மாநில் உரிமைகளைப் பாதுகாக்க கூட்டாட்சிதான் தேவை.

தமிழகத்தில் நீர்நிலைகளை, நாம் ஒழுங்காக பராமரித்தாலே நீர் பற்றாக்குறை ஏற்படாது. அரசியலில் வென்றாலும் தோற்றாலும் அரசியலில் நீடிப்பேன். வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே அரசியலுக்கு நான் வரவில்லை. டாஸ்மாக் கடைகளை யார் வேண்டுமானாலும் நிர்வகிக்க முடியும். பிஇ படித்தவர்கள் விஏஓவாகும் நிலைமை மாற வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன் மத்திய அரசு மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url