நல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு


காவிரி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம்.

காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்; காவிரி பிரச்னை மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்கவேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். காவிரி பிரச்னைக்காக கர்நாடக முதல்வரையும் சந்திக்க தயாராக உள்ளோம்கமலின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url