கமல்ஹாசனின் சுற்று பயண விவரங்கள் வெளியீடு... நாளை விசில் செயலி தொடக்கம்



கமல்ஹாசன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள விவரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட விசில் செயலி தொடங்கப்படவுள்ளது. கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் மேற்கொள்ள சுற்றுபயணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 16 கன்னியாகுமரி, 17 தூத்துக்குடி, 18 நெல்லை மற்றும் விருதுநகர், ஜூன் 8-ஆம் தேதி திருப்பூர், 9-ஆம் தேதி நீலகிரி, 10-ஆம் தேதி கோவை ஆகிய இடங்களில் மக்களை சந்திக்க செல்கிறார் கமல். மேலும் சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட விசில் செயலியை கட்சி உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல் அறிமுகப்படுத்துகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url