சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு - கமல் நிகழ்ச்சி ரத்தானது

சென்னை: மத்திய தோல் ஆராய்ச்சித்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்திய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதே விழாவில் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். தற்போது கட்சிக்கான உறுப்பினர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறார் கமல். பல நகரங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். இன்று மத்திய தோல் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார் கமல்ஹாசன். 'நமக்கான அரசியல் பயணத்தில் நம்மவருடன் நாம்' என்ற இந்த பொதுக்கூட்டம், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url