பச்சையப்பன் கல்லூரியில் விஜய் பட சூட்டிங்கிற்கு எதிர்ப்பு.. பேராசிரியர்கள், மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் கல்லூரியில் விஜய் பட சூட்டிங் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்பட சூட்டிங், 'தளபதி62' என்ற தற்காலிக பெயரில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் சூட்டிங் இன்று காலை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. பேராசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் சூட்டிங் நடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் சில நிமிடங்கள் சூட்டிங் பாதிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் சூட்டிங் எடுக்கிறோம் என படக்குழுவினர், கல்லூரி முதல்வரிடம் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் காலை நேரத்தில் பரபரப்பு காணப்பட்டது.Next Post Previous Post
No Comment
Add Comment
comment url