படக்குழுவினருக்கு விஜய் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்... லீக் ஆவதால் இந்த முடிவு!

சென்னை : விஜய், சமீபகாலமாக தனது ஹேர்ஸ்டைல் மற்றும் கெட்டப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் நியூ லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மூலமாக வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலாகி விடுகின்றன. இந்நிலையில், படத்திற்கான தனது கெட்டப் லீக் ஆகிவிடுவதால், செட்டில் யாரும் மொபைலில் போட்டோ எடுக்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.


வித்தியாசமான ஹேர்ஸ்டைல் சமீபகாலமாக தனது ஹேர்ஸ்டைல், மீசை, தாடி என ஒவ்வொன்றிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் விஜய். முன்பெல்லாம் படம் முழுக்க ஒரு கெட்டப்பில் வந்தாலும் பாடல் காட்சிகளில் ஏதேனும் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோன்றுவார்.


மெர்சல் கெட்டப் ஆனால் இப்போது ஒரே வேடத்தில் நடித்தாலும் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றி அசத்துகிறார். அந்த வகையில், 'மெர்சல்' படத்தில் மூன்றுவிதமான வேடங்களில் நடித்தவர், தளபதி வேடத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு நடித்தது பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.

அதே ஹேர் ஸ்டைலிஸ்ட் அதனால் அந்தப் படத்தில் தனக்கு ஹேர்ஸ்டைல் செய்த தேவ் என்பவரையே இப்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வைரலாகும் நியூ லுக் விஜய் 62 படத்தின் ஷூட்டிங் காட்சிகள் சமீபத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. படத்தின் போட்டோஷூட் நடந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செம கெட்டப் 'விஜய் 62' படத்தில் விஜய்யின் ஹேர்ஸ்டைல், மீசை இரண்டுமே புதுமையாக உள்ளதாம். ஆனால் அதை இப்போதே வெளிப்படுத்தி விட்டால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் போய்விடும் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் யாரும் மொபைல்போனில் தன்னை படம் பிடிக்கக்கூடாது என்று விஜய் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url