கட்சி பெயரில் திராவிடம் இல்லாதது ஏன் தெரியுமா?.. கமல் புதிய விளக்கம்

திராவிட அரசியல் செய்வதாக அறிவித்த கமல் கட்சி பெயரில் திராவிடத்தை காணவில்லை ஏன்? | Oneindia Tamil சென்னை: தனது கட்சி பெயரில் திராவிடம், தேசியம் என்ற வார்த்தைகள் இல்லாதது ஏன் என்பது குறித்து கமல் விளக்கம் அளித்து இருக்கிறார். நேற்று மதுரை ஒத்தக்கடையில் தன்னுடைய கட்சியை தொடங்கி கொடியும் ஏற்றிவிட்டார். கமல் நடத்திய முதல் அரசியல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. ஏற்கனவே கட்சியின் சின்னம் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துவிட்டது

கட்சிக்கு மக்கள் கட்சியின் நீதி மய்யம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் நீதி மய்யமும் பெரிய அளவில் புகழ் அடைந்து இருக்கிறது. ஆனால் கட்சி பெயரில் திராவிடம், தேசியம் ஏன் இல்லை என்பதற்கு கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் 'திராவிட தேசியம்' என்ற கூறினால் நாளை நமதே என்று பேசிதான் நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன் என்றுள்ளார். மேலும் ''திராவிடம் என்பது இந்தியா முழுமைக்குமானது. திராவிடம், தேசியம் இரண்டையும் நான் ஒதுக்கவில்லை. இரண்டையும் நான் சமமாக பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url