நிஜ வாழ்க்கையில் நடிக்க விரும்ப வில்லை நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார்


துபாயில் 2.0 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



நிஜ வாழ்க்கையில் நான் நடிக்க விரும்ப வில்லை. ஏன் என்றால்  அதற்காக காசு தருவதில்லை.எனவே சினிமாவில் மட்டும் நடிக்கிறேன். என கூறினார்.

இயக்குனர் ஷங்கர் கூறும் போது 2.0  திரைப்படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல. எதிரனின் தொடர்ச்சியான கதையாக  2.0 திரைப்படம் இருக்காது. 2.0 படம் ஹாலிவுட் படம் போன்றது. ஆனால் எந்த படத்தையும் காப்பி அடிக்கவில்லை. படத்தின் கதை உலகளாவியது. அதனால் தான் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். 2.0  அறிவியல், சமூகம் சார்ந்த கற்பனை கதை.

இது தமிழ் படம் கிடையாது, இந்திய படம்.  முற்றிலும் வித்தியாசமான புதிய கதைகளத்தில் உருவாகிறது. இந்தப்படம் 3டி படங்களை ஊக்கப்படுத்தும் விதமாக உருவாகி உள்ளது என கூறினார்.

ஏ.ஆர்.ரகுமான் கூறும் போது  நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் 3 பாடல்களில் 2 பாடல்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url