Type Here to Get Search Results !

ராகவா லாரன்சின் காஞ்சனா 3-ல் ஓவியா




நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோ பதிவிட்டு வருகிறார். அவர் எப்போது அடுத்த படம் நடிப்பார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முனி’, 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ்.

தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி எடுத்து பெயர் பெற்றவர். தற்போது 'காஞ்சனா 3' மூலம் தயாராகிவிட்டார் லாரன்ஸ். இதிலும் தானே நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிழ்ச்சி மூலம் வரவேற்பை பெற்ற ஓவியா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad