சிகரெட் புகைத்தது நான்தான் : அமலாபால் ஒப்புதல்
சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் ஸ்டைல் செய்யும் ஹீரோக்களை ரசிகர்கள் ரசிக்கின்றனர். அதேசமயம் ஒரு நடிகை சிகரெட் புகைத்தால் அது பரபரப்பான விஷயமாகி விடுகிறது. டைரக்டர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமலாபால் அவ்வப்போது விவகாரமான விஷயங்களில் சிக்கிக்கொள்கிறார். சமீபத்தில் அமலாபால், சிகரெட் புகைத்து வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் குபு குபுவென புகைவிடும் காட்சி நெட்டில் வெளியானது. அது வைரலானது.
வீடியோவில் இருப்பது அமலாபால் அல்ல, யாரோ கிராபிக்ஸ் செய்து இப்படியொரு காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சிலர் கூறினர். இதனால் அக்காட்சியில் இருப்பது அமலாபால்தானா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. அதை அவரே தீர்த்து வைத்திருக் கிறார்.‘தற்போது நடித்து வரும் படமொன்றிற்காக நான் சிகரெட் புகைக்கும் காட்சியில் நடித்திருக்கிறேன். இது மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் இக்காட்சியில நடிக்க வேண்டி இருந்தது’ என்றார் அமலாபால்.