குளியல் போட்டோ வெளியிட்ட நடிகை
இந்தியில் ஹலோ டார்லிங், தேங்க்யூ, வில் யு மேரி போன்ற பல படங்களிலும் கன்னடத்தில் மதி, தெலுங்கில் சுர்யம் படங்களிலும் நடித்திருப்பவர் செலினா ஜெட்லி. இவர் 2001ம் ஆண்டு உலக அழகி போட்டியில் 4வது இடத்தை பிடித்தவர். பீட்டர் ஹாக் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு மணந்தார். இரட்டை குழந்தை பிறந்தது. தற்போதும் கர்ப்பமாக இருக்கிறார். இப்போதும் அவருக்கு இரட்டை குழந்தை தான் என டாக்டர்கள் கூறியிருக்கின்றனர். கர்ப்பமோ, இரட்டை குழந்தையோ அவரை கட்டுப்படுத்தவில்லை. நேற்று பாத்ரூமிற்கு குளிக்க சென்றவர் அங்குள்ள பாத்டப்பிற்குள் நிர்வாணமாக அமர்ந்தார். தண்ணீரை நிரப்பி சோப்பு நுரையையும் லேசாக படர விட்டவர் பிறகு கர்ப்பவதி கோலத்திலேயே நிர்வாணபுகைப்படத்தை எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டார். இப்படிக் கூடவா செய்வாங்க என்று பலர் கேட்ட தற்கு அவர் அளித்த பதில்: பெண்கள் தங்கள் உடல் பற்றி ஒரு வித எதிர்மறையான எண்ணங்கள் வைத்திருக்கிறார்கள்.
அந்த எண்ணத்தை போக்கும் விதமாக இப்படத்தை வெளியிட்டேன். கர்ப்பம் ஆகும் போது எவ்வளவு உடல் எடை கூடுகிறோம் என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. அந்த கால கட்டத்தில் நமது உடலை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடல் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தாய்மைக்கான பயணம். இது தொடர்பான பயத்தை விட்டுவிடுங்கள். நான் நிர்வாணமாக இருக்கும் இப்படத்தை எனது கணவர் பீட்டர் தான் எடுத்தார். பெண்கள் தங்கள் உடல் அழகையும் மாற்றங்களையும் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பகாலத்தில் இந்த எண்ணம் அதிகமாக இருக்க வேண்டும். இந்த கால கட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருங்கள். குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.