பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா! இன்று யார் வெளியேறுகிறார்கள்?






பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்படும் நபர் என்பதைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டன. இந்த வாரம் நாமினேட் ஆன நான்கு பேரில் ஹரீஷ் காப்பாற்றப்பட்டார் என்று கமல் அறிவித்துவிட்டார்.




மற்ற மூவரில் வெளியேறும் அந்த ஒருவர் வையாபுரிதான் என்பது புலனாகியது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரிதான் வெளியேறக் கூடும் என்பது சமூக வலைதளங்களில் அவர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

நூறாவது நாளை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பும் கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் சினேகன் தான் வெல்வார் என்று ஒரு தரப்பினரும் கணேஷ் வெங்கட்ராம் என்று இன்னொரு தரப்பினரும் எதிர்ப்பார்க்கின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களில் உலக நாயகனின் அரசியல் கமெண்டுக்கள் இந்நிகழ்ச்சியை மெருகேற்றிவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தவர் ஓவியா. அவர் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளும் அனைவரையும் கவர்ந்தவர். ஜூலி, ஆர்த்தி ஆகியோர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஓவியா வர மறுத்துவிட்டார். ஆனால் விரைவில் இந்நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் நிகழ்ச்சியின் 100-வது நாளில் சிறப்பு விருந்தினராக ஓவியாவை அழைத்துள்ளனர். தனக்கு மீண்டும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிச்சயம் ஓவியா கலந்து கொள்வார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url