தமிழ் சினிமாவில் நடிக்க தயார்: 'ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷர்லின் பேட்டி





ஓணம் பண்டிகையை ஒட்டி இணையதளத்தில் பதிவேற்ற பதிவேற்றப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனை உருவாக்கியவர்கள் கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.அந்த வீடியோ பதிவில், தனது நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஷர்லின். அக்கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கல்லூரிப் பேராசிரியராக சேர்ந்துள்ளார். ஓணம் பண்டிகைக்காக ஏதாவது வித்தியாசமாக வீடியோ பதிவு செய்யலாம் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஷர்லின், "இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் தான். ஆனால் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்" என்று தெரிவித்துள்ளார். ஷர்லினுக்கு ரசிகர் மன்றம் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பல்வேறு பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இவர் நடனமாடும் வீடியோ பதிவும் சுமார் 9 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url