டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் மனித மாமிசம் சாப்பிடும் போராட்டம்




புதுடெல்லி: நதிகளை இணைத்தல், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண் வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பின்புறம் கோவணத்தை எடுத்துவிட்டு அரை கோவணத்துடன் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்திவருவதால் டெல்லி போலீசார் கோவணத்துடன் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான 31 விவசாயிகளை கைதுசெய்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு அவர்களை விடுவித்தனர்.

இதையடுத்து 59வது நாளாக விவசாயிகள் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர். கோவணத்துடன் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்பு துண்டுகளுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மனித மாமிசத்தை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகளின் அவல நிலையை பார்த்த அங்கு போராட்டம் நடத்த கூடியிருந்த உத்தரபிரதேச ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் மோடி டவுன், டவுன் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அய்யாக்கண்ணு கூறுகையில், வறட்சி நிவாரணம், இன்சூரன்ஸ் தொகையை தரவில்லை. அழிந்த பயிர்களுக்கு நஷ்டஈடு தரவில்லை. விவசாயிகளை பார்க்க மறுக்கும் பிரதமர் மோடியை கண்டித்து மனித எலும்பு, மாமிசத்தை சாப்பிடும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url