மீண்டும் ‘யானை’ படம்
நாய் முதல் யானை வரை நடிகர், நடிகைகளுக்கு தோழனாக நடித்த படங்கள் பல வந்திருக்கிறது. அந்த பாணியில் மீண்டும் யானையுடன் நடிகை தோழியாக நடிக்கும் படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் ராஜதுரை கூறும்போது,’ ஒரு படித்த இளைஞன் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பியதால் ஏற்படும் ஏமாற்றத்தை கருவாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சீதா என்ற யானையுடன் தோழியாக ஓவியா நடிக்கும் இப்படத்துக்கு சீனி என பெயரிடப்பட்டிருக்கிறது.
தற்போது துணைப் பெயராக ஓவியாவை விட்டா யாரு என சேர்க்கப்பட்டிருக்கிறது. புதுமுகம் சஞ்சீவி ஹீரோ. கஞ்சா கருப்பு, ராதாரவி, செந்தில், வையாபுரி, சரவணன், சீனிவாசன், பரத் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மதுரை செல்வம் தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை. நாகராஜ் ஒளிப்பதிவு’ என்றார்.