ஒருவர் மட்டும் நடிக்கும் படம்: கார்கில்
சுபா செந்தில் தயாரித்துள்ள படம், கார்கில். ஜிஷ்ணு ஹீரோ. இயக்குனர் சிவானி செந்தில் கூறுகையில், ‘ஹீரோயினுடன் ஊடல் கொண்ட ஹீரோவின் சென்னை டூ பெங்களூரு வரையிலான கார் பயணமும், அப்போது நடக்கும் நிகழ்வுகளும்தான் கதை. படம் முழுவதும் ஜிஷ்ணு மட்டுமே நடித்துள்ளார். இது புது முயற்சி என்றாலும், முழுநீள கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளோம்’ என்றார். ஒளிப்பதிவு, கணேஷ் பரமஹம்ஸா. இசை, விக்னேஷ் பாய். பாடல்கள்: பாரி இளவழகன், தர்மா. விரைவில் படம் ரிலீசாகிறது.